இடுகைகள்

Samsung அறிமுகம் செய்யும் Galaxy Tab A

படம்
மொபைல் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்துவரும் Samsung நிறுவனம் Galaxy Tab A எனும் புத்தம் புதிய டேப்லட்டினை(Tablet) அறிமுகம் செய்துள்ளது. முதன் முதலாக ஜேர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டேப்லட் WiFi மற்றும் LTE வலையமைப்பினைக் கொண்ட இரு பதிப்புக்களாகக் கிடைக்கின்றன. இவற்றில் WiFi தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட்டின் விலை 299 பவுண்ட்ஸ் ஆகவும், LTE தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட்டின் விலை 349 பவுண்ட்ஸ்களாகும். மேலும் 9.7 அங்குல அளவு, 1024 x 768 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இச்சாதனத்தில் 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad Core Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM மற்றும் 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பனவும் காணப்படுகின்றன. இவை தவிர 5 மெகாபிக்சல்களை(5 Megapixel) உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை(2 Megapixel) உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள்

படம்
ஆப்பிள் நிறுவனம் என்றாலே ஐபோன், ஐபேட், ஐமேக், ஸ்டீவ் ஜாப்ஸ் என்று நினைக்காதீர்கள். ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத பல விஷயங்கள் இருக்கின்றது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் விஷயங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்... ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ஐபோன்களில் இருந்து மட்டும் சுமார் 51.2 பில்லியன் டாலர்கள், இது யாஹூவின் மொத்த லாபத்தை விட அதிகம் ஆகும். யாஹூ நிறுவனத்தின் மொத்த லாபம் சுமார் 45.5 பில்லியன் டாலர்கள் தான். ஆப்பிள் ஐபோன் காலாண்டு லாபம் கூகுளின் மொத்த வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கின்றது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட ஆப்பிளின் ஐபோன் காலாண்டு லாபம் இரு மடங்கு அதிகமாகும். மைக்ரோசாப்ட் நோக்கியாவை விட ஆப்பிள் 7 மடங்கு அதிக போன்களை விற்றுள்ளது. 2011 ஆம் நிதி ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 74.5 மில்லியன் ஐபோன்களை விற்றுளது. இது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சந்தாதாரர்களுக்கு செலுத்தியதை விட 20 மில்லியன் அதிகமாகும். ஆப்பிள் நிறுவனம் 178 பில்லியந் டாலர்களை கொண்டிருப்பதால், ஐபிஎம் நிறுவனத்தை அதன் சந்

பேஸ்புக்கில் உங்கள் பேஜ்க்கு அதிக லைக்ஸ் வேண்டுமா..?

படம்
இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பலரும், தங்களக்கென தனி பக்கமாக உருவாக்கி கொள்கின்றனர். சிலர் அந்த பக்கத்தை வியாபர ரீதியாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு பேஸ்புக் பேஜ் நடத்துபவர்கள் தங்களது பேஜ்க்கு அதிக லைக்ஸ் எப்படி வாங்குவது என்பதை பார்க்கலாம்.. 1. உங்களது மின்னஞ்சலில் இருக்கும் கான்டாக்ட்களுக்கு அழைப்பு விடுக்கலாம். 2.பேஸ்புக்கில் இருக்கும் உங்களது நட்பு வட்டாரங்களை லைக் செய்ய அழைக்கலாம். 3.அவ்வப்போது சிறிய போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கலாம். 4.நீங்கள் பணியாற்றும் தகவலை பேஸ்புக்கில் குறிப்பிடும் போது அங்கு உங்களின் பேஸ்புக் பக்கத்தில் பணியாற்றுவதாக குறிப்பிடுங்கள். 5.உங்களது தகவல்களை மற்றவர்கள் படிக்கும் முன் உங்களது பக்கத்திற்கு லைக் செய்யும் படி செய்யலாம். 6.நீங்கள் நடத்தும் பேஜ் சம்பந்தப்பட்ட மற்ற பேஸ்புக் பேஜ்களுக்கும் நீங்கள் லைக் செய்யலாம். 7.உங்களது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தகவல்களை கொடுத்தால் தானாக லைக்ஸ் அதிகரிக்கும். 8.மக்களை உங்களது பேஜ்க்கு லைக் செய்ய அழைக்க வேண்டும், ஒவ்வொரு இடத்திலும் உங்களது பேஸ்புக் பக்கத்தை லின்க் செய்ய

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

படம்
ஸ்மார்ட்போனில் தகவல்கள் அழிந்து போவது சகஜமான விஷயம் தான். அவ்வாறு அழிந்து போன பின் அதை திரும்ப மீட்க பல வழிமுறைகள் இருக்கின்றன. ஆன்டிராய்டில் தகவல்கள் அழிந்து போனால் முதலில் செய்ய வேண்டிய விஷயங்களை விட செய்ய கூடாதவைகள் நிறைய இருக்கின்றது.  கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆன்டிராய்டு கருவியில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி என்று பாருங்கள்....   அப்டேட் ஆன்டிராய்டில் டேட்டா அழிந்த பின் அதில் எவ்வித டேட்டாக்களையும் ஆட் செய்தல் மற்றும் டெலீட் செய்ய கூடாது. இவ்வாறு செய்தால் அழிந்து போன ஆன்டிராய்டு தகவல்களை மீட்கவே முடியாது. ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி கம்ப்யூட்டரில் ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி ப்ரோகிராமை இன்ஸ்டால் செய்து ரன் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது ஆன்டிராய்டு கருவி கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். யுஎஸ்பி டீபக்கிங் ஆன்டிராய்டு கருவியை கம்ப்யூட்டருடன் இணைத்த பின் யுஎஸ்பி டீபக்கிங்கை எனேபிள் செய்ய வேண்டும். ஸ்கேன் யுஎஸ்பி டீபக்கிங் எனேபிள் செய்த பின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். கான்டாக்ட் ஆன்டிராய்டு டேட்டா ரிக்க

உங்களது ஆன்டிராய்டு போன்களில் புகைப்படங்களை கொண்டு வீடியோக்களை உருவாக்குவது எப்படி..?

படம்
ஸ்மார்ட்போனில் தினந்தோரும் பல புகைப்படங்களை எடுக்கின்றீர்கள் அவற்றை கொண்டு வீடியோக்களை உருவாக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா, ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை கொண்டு வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று பாருங்கள். செயலி ஆன்டிராய்டு ஸ்மாரப்ட்போனில் பிக்பேக் “PicPac” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். புகைப்படம் இன்ஸ்டால் செய்த பின் புகைப்படங்களை உங்களது கருவியில் இருந்தும் எடுத்து கொள்ளலாம் அல்லது இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டில் இருந்தும் பயன்படுத்தலாம். ஃப்ரேம் தேவையான புகைப்படங்களுக்கு ஏற்ற நேரத்தை செட் செய்ய வேண்டும், ஒரு புகைப்படத்திற்கு அதிக பட்சம் 10 நொடிகள் வரை செட் செய்ய முடியும். நெக்ஸ்ட் அடுத்து செயலியின் எடிட்டிங் ஸ்கிரீனில் இருக்கும் நெக்ஸ்ட் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும், இங்கு பெயர் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ள முடியும். க்ரியேட் அடுத்து க்ரியேட் வீடியோ என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். நேரம் புகைப்படங்களுக்கு ஏற்ற நேரம் ஆகும், அதுவரை காத்திருக்க தான் வேண்டும். ஆடியோ அடுத்து வீடியோவிற்கு ஆடியோ சேர்க்க வே

புதிய மொழிகளை உள்ளடக்கிய ஸ்கைப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு

படம்
மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கி வரும் உலகின் பிரம்மாண்டமான குரல்வழி மற்றும் வீடியோ அழைப்பு சேவையான ஸ்கைப்பின் புதிய பதிப்பு அப்பிள் கணனிகளுக்காக வெளிவரவுள்ளது. 7.5வது பதிப்பாக வெளிவரும் இப்புதிய அப்பிளிக்கேஷனில் மேலும் 14 நாடுகளின் மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. Hindi, Turkish, Czech, Ukrainian, Greek, Hungarian, Romanian, Indonesian, Catalan, Croatian, Slovak, Vietnamese, Thai மற்றும் Malay ஆகிய நாட்டு மொழிகளை உள்ளடக்கியுள்ளதுடன், மேலும் சில புதிய அம்சங்கள் காணப்படுகின்றன. இதனை Mac OS X 10.9 இற்கு பிந்திய இயங்குதளங்களில் நிறுவிப் பயன்படுத்த முடியும்.

திறன்பேசிகளை இனி வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யலாம்!

படம்
மார்ச் 9 – திறன்பேசிகள், ஐபேட் உள்ளிட்ட கையடக்கக் கருவிகளை பயன்படுத்தும் பொழுது நமக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் விஷயம், அந்த கருவிகளின் மின் செறிவு (சார்ஜ்). முக்கியமான தருணங்களில் மின் செறிவு தீர்ந்து விட்டால், அந்த நேரத்தில் மின் செறிவூட்டி (சார்ஜர்) மற்றும் மின்சார வசதியை தேடி அலைய வேண்டி இருக்கும். இந்த பிரச்னை இந்த வருடத்துடன் காணமல் போவதற்கான சாத்தியக் கூறுகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. சூரிய சக்தி மூலம் மின் செறிவு பெறும் திறன்பேசிகள்  ஏதேனும்  கண்டறியப்பட்டுள்ளன வா? போன்ற கேள்விகள் எண்ணத் தோன்றும்.  ஆனால் இது கம்பியில்லா இணைப்பு (வயர்லெஸ்) செய்யும் மாயம். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இருந்த இடத்தில் இருந்தே நமது கருவிகளுக்கு மின் செறிவூட்டலாம். சமீபத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற செல்பேசி முதலீட்டாளர்கள் மாநாட்டில், திறன்பேசி உள்ளிட்ட கருவிகளை வயர்லெஸ் முறையில் மின் செறிவூட்டும் மேஜை, நாற்காலி மற்றும் மின்விளக்கு ஆகியவற்றை பிரபல ஸ்வீடன் நிறுவனமான ஐகியா அறிமுகம் செய்துள்ளது.   இந்த நவீ