Samsung அறிமுகம் செய்யும் Galaxy Tab A

மொபைல் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்துவரும் Samsung நிறுவனம் Galaxy Tab A எனும் புத்தம் புதிய டேப்லட்டினை(Tablet) அறிமுகம் செய்துள்ளது.
முதன் முதலாக ஜேர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டேப்லட் WiFi மற்றும் LTE வலையமைப்பினைக் கொண்ட இரு பதிப்புக்களாகக் கிடைக்கின்றன.
இவற்றில் WiFi தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட்டின் விலை 299 பவுண்ட்ஸ் ஆகவும், LTE தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட்டின் விலை 349 பவுண்ட்ஸ்களாகும்.
மேலும் 9.7 அங்குல அளவு, 1024 x 768 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இச்சாதனத்தில் 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad Core Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM மற்றும் 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பனவும் காணப்படுகின்றன.
இவை தவிர 5 மெகாபிக்சல்களை(5 Megapixel) உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை(2 Megapixel) உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

கணினியை Format மற்றும் Windows 7 install செய்வது எப்படி?

ஐ.பி. அட்ரஸ் அறிய...