இடுகைகள்

Google லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழில் தேடுவதற்கு கூகிள் தரும் வசதி...

படம்
தேடுவது என்று சொன்னால் நம்மில் பலர் செல்லுமிடம் கூகிள் தான்.இன்று நாம் பார்க்கப்போவது கூகிள் மூலம் இலகுவாக தமிழில் டைப் செய்து தேடுவது எப்படி என்று. Search Engine களில் ஆங்கில சொற்களை நேரடியாக டைப் செய்து தேடுவது மாதிரி தமிழ் சொற்களை டைப் செய்து தேட முடியாது.அப்படி Search Engine இல் தமிழில் தேட வேண்டுமாயின் வேறு ஒரு இடத்தில் டைப் செய்து அதை யுனிகோடுக்கு மாற்றி அதை copy செய்து, paste செய்து கொள்ள வேண்டும்.இந்த முறையானது நமக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் Google Search Engine இல்  தமிழில் டைப் செய்து தேடும் வசதி இருக்கின்றது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.Google Search Engine இல் தமிழில் டைப் செய்து தேடுவதற்கு http://www.google.lk/  என்பதற்கு சென்று,தமிழ் என்பதை கிளிக் செய்யுங்கள். உதாரணமாக நீங்கள்  thamil என்று டைப் செய்தீர்கள் என்றால், கீழே தமிழ் சம்பந்தமான முடிவுகளை காணலாம்.இது தமிழில் தேடும் சந்தர்ப்பத்தில் மிகவும் இலகுவாக அமையும். இனி தமிழில் தேடுவதற்கு யுனிகோடுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை,நேரடியாகவே டைப் செய்து...

கூகுள் மெனுபாரின் நிறத்தை அழகாக மாற்றலாம்

படம்
கூகுல் தளத்திற்கு சென்றால் கூகுளின் மெனுபார் இருக்கும். அந்த மெனுபாரின் நிறம் இளம் கருப்பு நிறத்தில் இருக்கும். இது பார்ப்பதற்கு சற்று மங்கலாக இருப்பதால் சில பேருக்கு இந்த நிறம் பிடிப்பதில்லை. அப்படி நினைப்பவர்கள் இனி கவலை பட தேவையில்லை நமக்கு பிடித்த மூன்று வண்ணங்களில் நாம் சுலபமாக அந்த மெனுபார் கலரை மாற்றி கொள்ளலாம். குரோம் நீட்சியின் உதவியுடன் இந்த மெனுபார் கலரை சுலபமாக மாற்றி கொள்ளலாம்.  இந்த வசதியை பெற நீங்கள் குரோம் உலவியை உபயோகிக்க வேண்டும். கீழே உள்ள நிறங்கள் மாற்ற பட்ட மெனுபாரின்  அழகை காணுங்கள்  பிங்க் நிறத்தில் மாற்ற இங்கு க்ளிக் செய்யவும்  நீல நிறத்தில் மாற்ற இங்கு க்ளிக் செய்யவும்  பச்சை நிறத்தில் மாற்ற இங்கு க்ளிக் செய்யவும்  இதில் உங்களுக்கு தேவையான நிறத்தின் மீது க்ளிக் செய்தால் நீட்சி டவுன்லோட் ஆகும். அடுத்து சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Install பட்டனை அழுத்தவும் அவ்வளவு தான் அடுத்த வினாடியே உங்கள் கூகுள் மெனுபாரின் நிறம் மாறிவிடும். கூகுள், ஜிமெயில்,கூகுள் பிளஸ் இப...

கூகுள் சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் சுலபமாக திறக்க - Terminal for Google

படம்
கூகுள் பல எண்ணற்ற பயனுள்ள சேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பிளாக்கர், ஜிமெயில், யூடியுப், பீட்பர்னர் என இதன் பட்டியல் நீள்கிறது. இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் ஓபன் செய்ய வேண்டும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் தனித்தனியாக URL கொடுப்பதிர்க்கு பதில் ஒரு கிளிக் செய்தாலே அந்த குறிப்பிட்ட தளத்திற்கு செல்லும் வசதியை எப்படி கொண்டு வருவது என்பதை விளக்கும் பதிவு இது. இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு நொடியில் சென்றுவிடலாம். ஒவ்வொரு முறையும் URL டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.    நீட்சியின் பயன்கள்: ஒவ்வொரு முறையும் URL கொடுத்து தளத்தை ஓபன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அடிக்கடி உபயோகிக்கும் கூகுள் சேவைகளில் முதலில் வைத்து கொண்டும் ஒரே கிளிக்கில் அந்த தளத்திற்கு சென்று விடலாம். உங்களுக்கு எத்தனை கூகுள் சேவைகள் தெரிய வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். எந்த இணையதளத்தின் இணைய பக்கத்தையும் ஜிமெயில...

கூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன?

படம்
 கூகிள் நிறுவனம் தனது Google Docs சேவையினை மேம்படுத்தி கூகிள் ட்ரைவ் (Google Drive) என்னும் புதிய சேவையினை தொடங்கியுள்ளது. இது நமது கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்க உதவும் மேக சேமிப்பு சேவையாகும்(Cloud storage service).     கூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன? நம்முடைய கணினிகளில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் என பல்வேறு கோப்புகளை சேமித்து வைத்திருப்போம். தேவைப்படும் போது அதனை பார்ப்போம். ஆனால் வெளியிடங்களுக்கோ, வெளியூர்களுக்கோ சென்றால் அவற்றை பார்க்க முடியாது. லேப்டாப், மொபைல்களில் உள்ளவற்றை மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். அதற்கு தீர்வாக வந்தது தான் மேகக் கணிமை (Cloud Computing) தொழில்நுட்பம். கூகிள் ட்ரைவ் சேவையும் இந்த தொழில்நுட்பத்தைத் தான் பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் நம்முடைய கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்கலாம். மேலும் நாம் எங்கு சென்றாலும் அவற்றை அணுக முடியும். உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் இருக்கும் போது ஒரு வீடியோவை கூகிள் டிரைவில் பதிவேற்றம் செய்கிறீர்கள். பிறகு வெளியூருக்கு செல்லும்போத...