விண்டோஸ் 10-ஐ தரவிரக்கம் செய்து கொள்ளுங்கள்...

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பாக விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கணினி, டேப்லட், மொபைல் ஆகிய அனைத்துக்கும் இனி ஒரே இயங்குதளமாக விண்டோஸ் டென் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
windows 10
தற்போதைய விண்டோஸ் 8.1 பதிப்பின் மேம்படுத்தளாக  விண்டோஸ் 9-ஐ நேற்று வெளியிடப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய இயங்குதளத்திற்கு விண்டோஸ் 10 என்று பெயரிட்டுள்ளது.
இதற்கு காரணம், இந்த புதிய அப்டேட் முன்னெப்போதும் இல்லாத வகையில் நவீன வசதிகள் இருக்கும் என்பதால் விண்டோஸ் 9-ஐ புறக்கணித்துவிட்டு விண்டோஸ் 10 என பெயரிட்டுள்ளது.
புதிய வசதிகள்:
Start Menu:
windows 10 start menu
விண்டோஸ் 7 போன்ற பழைய விண்டோஸில் உள்ளது போல ஸ்டார்ட் மெனுவை மீண்டும் கொண்டு வந்துள்ளது. மேலும் நம் விருப்பப்படி மாற்றியமைக்கும் வசதியும் உள்ளது.
Apps Window:

windows 10 App
விண்டோஸ் ஸ்டோர் அப்ளிகேசன்கள் இனி சாதாரணமான டெஸ்க்டாப் அப்ளிகேசன்கள் செயல்படுவது போல தனி விண்டோவில் செயல்படும்.
ஒரே சமயத்தில் நான்கு அப்ளிகேசன்கள்:
windows 10 multi screen
ஒரே சமயத்தில் நான்கு அப்ளிகேசன்களை எவ்வித தடையுமின்றி பயன்படுத்தலாம்.
Task View:
windows 10 task view
நாம் திறந்திருக்கும் அனைத்து கோப்புகள், அப்ளிகேசன்களை பார்க்க புதிய டாஸ்க் வீவ்.
மேலும் பல வசதிகளுடன் விண்டோஸ் 10 இயங்குதளம் 2015-ஆம் வருடம் வெளியிடப்படுகிறது. விண்டோஸ் 8 பயனாளர்களுக்கு இது இலவசமாக கிடைக்குமா? அல்லது அனைவரும் பணம் கட்டி இதனை பெற வேண்டுமா? என்பதை மைக்ரோசாப்ட் தெரிவிக்கவில்லை.
இதன் சோதனைப்பதிப்பை http://preview.windows.com/ என்ற முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம். இது சோதனை பதிப்பு என்பதால் பிரச்சனைகள், பிழைகள் இருக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Mobile வெடித்து சிதறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

குரோம் பிரவுசர் பற்றி சில…!

Selfie எடுக்க இனி Phone வேண்டாம் இந்த கண்ணாடி போதும்