மால்வேரிலிருந்து பாதுகாக்க கூகுள் க்ரோம் 32


கூகுள் நிறுவனம் மால்வேரிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்கும் வசதியுடன்  கூகுள் க்ரோம் 32-ஆம் பதிப்பை வெளியிட்டுள்ளது.
நீங்கள் ஏற்கனவே கூகுள் க்ரோம் உலவியை நிறுவியிருந்தால் About பகுதிக்கு சென்றால் தானாக அப்டேட் ஆகும். இல்லையென்றால் google.com/chrome என்ற முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
கூகுள் க்ரோம் 32 புதிய வசதிகள்
Tab Indicator:
google chrome 32
நீங்கள் பார்க்கும் இணையதளத்தில் ஆடியோ, வெப்கேம் ஆகியவைகள் செயல்பட்டாலோ, உங்கள் கணினியை டிவியில் தொடர்புபடுத்தியிருந்தாலோ அதன் குறியீட்டை tab-ல் தெரிந்துக் கொள்ளலாம்.
Malware பாதுகாப்பு:
malware notification
நீங்கள் இணையத்தில் கோப்புகளை பதிவிறக்கம் செய்யும்போது மால்வேர் கோப்பு இருந்தால் அது பற்றி தானாகவே அறிவிப்பு செய்யும். Dismiss என்பதை க்ளிக் செய்து  மால்வேரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
குடும்ப உறுப்பினர்களுக்கான மேற்பார்வை:
google users
கூகுள் கிறோம் ப்ரவ்சரில் தனித்தனியாக பல கணக்குகள் உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு கணக்கிற்கும் அவர்கள் எந்தெந்த தளங்களை பார்க்கலாம் என்று அனுமதி கொடுக்கலாம். மேலும் அவர்கள் எந்தெந்த தளங்களை பார்த்தார்கள் எனவும் கண்காணிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Mobile வெடித்து சிதறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

குரோம் பிரவுசர் பற்றி சில…!

Selfie எடுக்க இனி Phone வேண்டாம் இந்த கண்ணாடி போதும்