ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ் சிறப்பம்சங்கள்
மிகுந்த
எதிர்பார்ப்புகளுக்கிடையே ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ் ஆகிய இரண்டு விதமான
ஐபோன்களை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். அத்துடன் ஆப்பிள் வாட்ச்
கடிகாரத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

தொழிநுட்ப நண்பன் தளத்தில் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தது போல அகண்ட மற்றும் வளைந்த திரைகளைக் கொண்டுள்ளது. முன்பைவிட மெல்லியதாகவும், அதிக திறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
கேமராவையும் அதிகம் மேம்படுத்தியுள்ளது ஆப்பிள். இந்த புதிய கேமரா Focus
Pixel என்னும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் போட்டோ
எடுக்கும் போது தானாகவே போகஸ் செய்ய அதிலுள்ள லென்ஸ் முன்னும் பின்னும்
நகரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஐபோன்கள் ஐஒஎஸ் 8 இயங்குதளத்தில் இயங்கும். இந்த புதிய ஐபோன் வடிவமைப்பு பிரமாதமாக உள்ளது.
ஐபோன் 6 & ஐபோன் 6 ப்ளஸ் சிறப்பம்சங்கள்:
- 4.7 இன்ச் ரெடினா HD திரை / 5.5 இன்ச் திரை ரெடினா HD
- ஐஒஎஸ் இயங்குதளம்
- A8 சிப் with 64-bit architecture, M8 motion coprocessor
- 8 மெகாபிக்சல் iSight கேமரா with 1.5µ pixels Front camera/
- Optical image stabilization (ஐபோன் 6 ப்ளஸ்ஸில் மட்டும்)
- 16GB, 65GB, 128GB மெமரி
- 6.9mm / 7.1mm மெல்லிய வடிவமைப்பு
- Apple Pay வசதி
- Colours: Silver, Gold, Space Grey
ஐபோன் 6 & ஐபோன் 6 ப்ளஸ் விலை :
ஐபோன் 6 – 649$ (16GB), 749$ (64GB), 849$ (128GB)
ஐபோன் 6 ப்ளஸ் – 749$ (16GB), 848$ (64GB), 949$ (128GB)
இந்தியாவில் எப்போது வெளியாகும்?
இரண்டு ஐபோன்களும் செப்டம்பர் 17-ஆம் தேதி யு.எஸ், யு.கே, சிங்கப்பூர்,
ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் வெளியாகும். இதற்கான முன்பதிவு
செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கும்.
இந்தியாவில் வரும் அக்டோபர் 17 முதல் விற்பனைக்கு வரும். இந்த வருட
இறுதிக்குள் நூற்று பதினைந்து நாடுகளில் விற்பனைக்கு வரும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் பற்றி விரிவாக பிறகு பார்ப்போம். அதுவரை தொடர்ந்திருங்கள் எங்களுடன்….!
கருத்துகள்
கருத்துரையிடுக