ஏதேனும் ஓர் இணைய தளத்தை, குரோம் பிரவுசர் வழியாகக் காண்கையில், அது முடக்கப்படுகிறதா? கிராஷ் ஆகித் தொடர்ந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளதா? அதே வேளையில், பயர்பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற மற்ற பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லாமல், சரியாகச் செயல்படுகிறதா? அப்படியானால், இதனை கூகுள் குரோம் இணைய தளத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம் . முதலில் அந்த இணையதளம் செல்லவும். அதன் சரியான முகவரியைத் தெரிந்து பயன்படுத்தவும்.குரோம் பிரவுசரின் வலது மேல் மூலையில் உள்ள ரிஞ்ச் பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், “Tools” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில், “Report an issue” என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய “Feedback” என்னும் டேப் கிடைக்கும். அதன் கீழாக “Tell us what is happening (required)” என்று ஒரு பெட்டி கிடைக்கும். இதில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்தும், அது எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது எனவும் தெளிவாகக் குறிப்பிடவும். குறிப்பிட்ட இணைய தளத்தில் எதனையேனும் தேடுகையில், இந்தப் பிரச்னை ஏற்பட்டிருந்தால், அது எந்...
கருத்துகள்
கருத்துரையிடுக