வாட்ஸ்அப் அப்ளிகேசனை வாங்கியது பேஸ்புக்

நண்பர்களுக்கு செய்திகளை அனுப்ப உதவும் வாட்ஸ்அப் மொபைல் அப்ளிகேசனை 19 பில்லியன்  டாலர் விலை கொடுத்து  வாங்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
facebook-whatsapp
மொபைலில் மெசேஜ் அனுப்புவதற்கு அதிகம் பயன்படுத்தப்படுவது Whatsapp அப்ளிகேசன் ஆகும். iPhone, BlackBerry, Android, Windows Phone, Nokia என்று அனைத்து மொபைல்களிலும் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்அப் அப்ளிகேசனுக்கு 450 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருக்கின்றனர்.
இந்த 19 பில்லியனில் 4 பில்லியன் பணமாகவும், 12 பில்லியன் பேஸ்புக் பங்குகளாகவும், 3 பில்லியன் ஊழியர்களுக்கான பங்கு தொகையாகவும் கொடுக்கவுள்ளது பேஸ்புக்.
வாட்ஸ்அப்பை வாங்கினாலும் அதனை பேஸ்புக் மெஸ்சஞ்சர் அப்ளிகேசனுடன் இணைக்காமல் தனியாகவே தொடரும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

மறந்துபோன விண்டோஸ்-7 & விண்டோஸ்-8 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

இறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளலாம் – வாய்ப்பை வழங்குகின்றது facebook நிறுவனம்