இடுகைகள்

வாட்ஸ்அப்பில் குறுந்தகவல்களை பாதுகாப்பது எப்படி?

படம்
வாட்ஸ்-அப் செயலியில் பகிரப்படும் சில முக்கிய தகவல்கள் பாதுகாக்கப்படாமல் இருந்தால் அது பெரிய ஆபத்தில் முடிய வாய்பிருக்கிறது. அதனால் பகிர்ந்துக் கொள்ளப்படும் குறுந்தகவல்களை பாதுகாப்பது என்பது முக்கியமான ஒன்று. அவற்றை எப்படி பாதுகாப்பது என்று பார்க்கலாம். பாஸ்வேர்டு பாதுகாப்பு முதலில் உங்களது வாட்ஸ்-அப் செயலியை பாஸ்வேர்டு அல்லது பின் நம்பர் கொடுத்து பாதுகாக்க வேண்டும். இது உங்கள் குறுந்தகவல்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கும். போட்டோரோல் ஐபோனில் போட்டோரோல்களை மாற்றியமைக்க, ஐபோன் செட்டிங்ஸ்- ப்ரைவஸி- போட்டோஸ் என்ற ஆப்ஷனை தெரிவு செய்து வாட்ஸ்-அப் செயலியை டீசெலக்ட் செய்ய வேண்டும். ஆன்டிராய்டில் இதை மேற்கொள்ள ES File Explorer ஆப்ஷனிற்கு சென்று அனைத்து போட்டோ மற்றும் வீடியோ போல்டர்களுக்கு சென்று .nomedia என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கினால் போதுமானது. மின்னஞ்சல் வாட்ஸ்-அப் தரப்பில் இருந்து மின்னஞ்சல்கள் வருவதற்கு சாத்தியமே இல்லை. ஒருவேளை நீங்களாக உதவி குறித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் மட்டும் அதற்கான் பதில்கள் மின்னஞ்சல் மூலம் வரும். ஏனைய மின்னஞ...

ஃபேஸ்புக் வழங்கும் இலவச இணையதள சேவை!

படம்
ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய மொபைல் ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதியை அளிக்க உள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்பட உள்ளது. இதன்படி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் இலவச இணையதள வசதியை பெற முடியும். இத்திட்டத்தின் மூலம் ஆரம்பத்தில் 33 வலைத்தளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதே போன்ற இலவச சேவையை ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவன வாடிக்கையாளர்களுக்குத் தருவது குறித்தும் பேசி வருவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. உலகில் 500 கோடி வாடிக்கையாளர்களை பெற இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி என்ற பிரமாண்ட திட்டத்தை ஃபேஸ்புக் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இலவச இணைய வசதி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை ஏற்கனவே ஆஃப்ரிக்க நாடுகளில் ஃபேஸ்புக் செயல்படுத்த தொடங்கிவிட்டது.

ஃபேஸ்புக் இலவச இணையதள வசதியின் எதிரொலி: குறைகிறது இணையதள கட்டணங்கள்!

படம்
ரிலையன்ஸ் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து செல்ஃபோனில் இலவச இணைய தள வசதியை அறிவித்துள்ளதால், போட்டி காரணமாக இணைய தள கட்டணத்தை குறைக்க மற்ற தொலைபேசி நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய செல்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதியை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அளிக்கவுள்ள இந்த சேவையை தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் பெற முடியும். தொடக்கத்தில் 33 வலைத்தளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்படக்கூடிய போட்டியை சமாளிக்க இணைய தள இணைப்புக்கான டேட்டா கட்டணத்தை மற்ற தொலைபேசி நிறுவனங்கள் குறைக்கக்கூடும் என சந்தை ஆய்வு நிறுவனமான கேபிஎம்ஜியின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதோடு குறிப்பிட்ட சில இணைய தளங்களை இலவசமாக பயன்படுத்தும் வசதியையும் அறிவிக்க தொலைபேசி நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

உங்கள் ஸ்மார்ட் போனில் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடுகிறதா?

படம்
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பலருக்கும் பெரிய தலைவலியாக இருப்பது பேட்டரியில் உள்ள சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடுவது. தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையில் ஸ்மார்ட் போனும் மிக முக்கியமானது என்ற சூழல் வந்துவிட்டது. பல வேலைகளையும் கையில் வைத்திருக்கும் சிறிய ஸ்மார்ட் போன் மூலம் எளிதில் முடித்து விடலாம் என்ற நிலை மாறிவிட்டது. ஆனால் ஸ்மார்போனில் உள்ள பேட்டரியின் சார்ஜ் விரைவில் தீர்ந்து விடுவது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஏன் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது? * இலவச செயலி மற்றும் சில விளையாட்டு ஆப்களை பதிவிறக்கம் செய்யும் போது அதில் இடம் பெறும் விளம்பரங்களே அதிகமாக சார்ஜ் எடுத்து கொள்கின்றது. இதனால் அதிக விளம்பரங்கள் இருக்கும் இலவச செயலிகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள். * சிலர் தாங்கள் வைத்திருக்கும் அனைத்து செயலிகளையும் ஆன் செய்து வைத்திருப்பர். இதனால் போனின் செயல்பாடு அதிகரித்து பேட்டரி தீரும். நீங்கள் பயன்படுத்தாத சமயத்தில் செயலிகளை ஆஃப் செய்து வைக்க வேண்டும். * உங்களது இருப்பிடத்தில் சிக்னல் எப்படி இருக்கின்றது என்பதையும் பாருங்கள், குறைந்த சிகனல் ...

வாட்ஸ்ஆப் பயனாளிகள் கவனத்திற்கு..!

படம்
வாட்ஸ்ஆப் இன்று உலகம் முழுவதிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலியாக இருப்பதோடு தகவல் பறிமாற்றத்தை உலகம் முழுவதிலும் மிக குறைந்த பட்ஜெட்டில் வழங்கியும் வருகின்றது.  இனி வாட்ஸ்ஆப் செயலி குறித்து உங்களுக்கு தெரிந்திராத வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்.. வாட்ஸ்ஆப் நிருவனம் 2009 ஆம் ஆண்டு முன்னாள் யாஹூ பணியாளர்களான ப்ரியான் ஆக்டன் மற்றும் ஜான் கொம் ஆகியோரால் நிருவப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தில் 8 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டது. தற்சமயம் இந்நுறுவனத்தில் 50 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். நாள் ஒன்றைக்கு 1 மில்லியன் பயனாளிகள் வாட்ஸ்ஆப் செயலியில் சேர்க்கப்படுவதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. வாட்ஸ்ஆப் செயலியில் பணியாற்றும் 32 பொறியாளர்களில் ஒருவர் 14 மில்லியன் பயனாளர்களுக்கு பொருப்பாக உள்ளனர். தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலியை 700 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆன்டிராய்டில் அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது வாட்ஸ்ஆப். வாட்ஸ்ஆப் நிருவனம் விளம்பரங்களை விற்பனை செய்து இ...

iOS மற்றும் Android சாதனங்களில் Microsoft’s Cortana

படம்
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கேரக்டரை உள்ளடக்கிய அப்பிளிக்கேஷனே Cortana ஆகும். பயனர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கக்கூடிய இந்த application இதுவரை Windows Phone இயங்குதளங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது iOS மற்றும் Android சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை iPhone, iPad, ஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகள் உட்பட டேப்லட்களிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் 10-ஐ இலவசமாக வழங்குகிறது மைக்ரோசாப்ட்

படம்
அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக வழங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. விண்டோஸ் 10-ன் மாதிரி பதிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது விண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும், விண்டோஸ் 10-ஐ இலவசமாக வழங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் அனுமதியில்லாமல் விண்டோசை பயன்படுத்துபவர்களை நேர்மையான பயனாளர்களாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதனால் தரமான விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த தகவலை சீனாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் இயக்குனர் டேர்ரி மைர்சன் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் கணனி மற்றும் செல்பேசிக்கான இந்த இயங்குதளத்தின் மாதிரி தோற்ற காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. பயன்பாட்டில் உள்ள விண்டோஸ் இயங்குதளமானது பெரும்பாலும், பணம் செலுத்தாமல் திருட்டு மென்பொருட்களாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.