BlueStacks மூலம் கணினியில் ANDROID Application'கலை பயன்படுத்த




இது பெரும்பாலும் விண்டோஸ் 7 பயனர்களுக்கு மட்டுமே இயங்கும். XP-யில் நான் முயற்சி செய்த போது இயங்கவில்லை. அத்தோடு Android Phone இல்லாதவர்களும் இதை பயன்படுத்தலாம். 

1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

2. இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். 

3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம். 





4. இனி இது Google Play & உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில் உள்ள "Search Icon" மீது கிளிக் செய்து தேடலாம். 

5. இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம். இணைய இணைப்பை பயன்படுத்தி App-ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும். 


நான் பயன்படுத்தும் Talking Tom, 






உங்களிடம் Android Phone இருந்தால்,


6. உங்கள் Android Phone - ஐ இந்த மென்பொருள் உடன் இணைக்க முடியும். வலது கீழ் மூலையில் உள்ள Settings Icon மீது கிளிக் செய்யுங்கள். வரும் பகுதியில் "Cloud Connect" என்பதை தெரிவு செய்யுங்கள். பின்னர் "Do you have a Android Phone" என்பதற்கு Yes தெரிவு செய்து Next கொடுங்கள். 


7. வரும் பகுதியில் BlueStacks - கில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து Register செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு 9 இலக்க Pin Number ஒன்று வந்திருக்கும். 


8. இப்போது உங்களுக்கு BlueStacks- இல் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்து இருக்கும். அடுத்து உங்கள் Android Phone - இல் நீங்கள் BlueStacks Cloud Connectஎன்ற Application - ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 


9. Application - ஐ இன்ஸ்டால் செய்து 9 இலக்க Pin Number - ஐ கொடுத்து Log In செய்து கொள்ளலாம். 





10. Log - in ஆன உடன் உங்கள் மொபைலில் உள்ள App - களை உங்கள் கணினியில் பயன்படுத்தும் BlueStacks உடன் Sync செய்து கொள்ளும் வசதி இருக்கும். 





இதில் குறிப்பிட்ட ஒரு App அல்லது அனைத்து App - களையும் உங்கள் கணினிக்கு Sync செய்து கொள்ளலாம். 


11. இனி Android App பயன்படுத்த உங்கள் Android Phone - ஐ பயன்படுத்த தேவையில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்களது ஸ்மார்ட்போனில் அழிந்து போன போட்டோக்கள் மற்றும் பிற டேட்டாக்களை மீட்பது எப்படி?

பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி?

ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.